நம் மண் காவிரியின் வீர மண்
ஐந்து வயதில் அரியணை ஏறி காவிரிக் கரையில் நாடாண்ட கரிகால் வேந்தர்
காவிரிக் கரையிலிருந்து இமயமலை வரை படையடுத்த வீரக் காவிரி மைந்தர்
இமயத்தையே வென்று வீழ்த்தியதால் குடகை சிறு கடுகாக்கிய கரிகாலர்
அடிமை ஆக்காமல் வாழ்ந்திட்டுப் போ என பிச்சையிட்ட இனமானத் தனயர்
கருவே இல்லாமல் நாடகம் போடுவதால் கபடம் கலைந்திடும் நாடகத்தாருக்கு
காவிரிக்கு அணை போட்டால் குடகே இடம் பெயர்ந்திடும் சோழத்தாருக்கு
எந்த ஆட்டத்தையும் அடக்கி ஆளும் வளமும் பலமும் மிக்க இயற்கைத் தாயே
வந்த ஆடியில் வந்ததைப் போல் வரும் ஆடியிலும் வந்திடு காவிரித் தாயே!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment