மேழிப் பிடித்துப் பயிற்சி
காங்கேயம் காளைகளோடு உழவு; தஞ்சாவூர் கலப்பையோடு உழவு
மேழி மேல் சிறியக் கையை வைத்து; பயிற்சிப் பெற்றது அப்பாவை வைத்து
உழுத மனிதரால் அன்று பெருமை; உழாத மனிதரால் என்றும் சிறுமை
வறட்டு ஓட்டு ஓட்டுவது பொன்னேரு; வரப்பு வெட்டி ஓட்டுவது சேற்றோடு
ஆலமரத்தடியில் ஆற அமர அமர்ந்து; தொன்னையில் நம் கஞ்சி விருந்து
அடை மாங்காய் உப்போடு சுவை; வெட்டு வத்தல் இனிப்போடு சுவை
காக்கையும் சிறிது சோறு உண்ணும்; தவக்கையும் ராக ஓசை பண்ணும்
நண்டும் நத்தையும் அழகாய் ஊரும்; நெல்லால் செழித்ததுதான் நம்ம ஊரும்!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment