மனமும் மதமும்
மதம் கொண்ட யானையும் ஆபத்து; மதம் கொண்ட மனிதனும் ஆபத்து
மதத்தை வைத்து மனம் மாறாது; மதத்தை வைத்து குணமும் மாறாது
மதம் மாறுவது மனித வாடிக்கை; பணத்திற்காக மாறுவது வேடிக்கை
எம்மதமும் நமக்கு சம்மதமே; இம்மதமும் அம்மதமும் அவ்விதமே
பெரியோர் பிறந்தது ஏழையாக; பெரியோர் இறந்ததும் ஏழையாக
இருக்கும் போது பெரும் இன்னல்; இறந்த பின்பு அவர்தான் அண்ணல்
மனிதனுக்கு பல பரிமாணங்கள்; பொய்யானது பல அனுமாணங்கள்
ஆசையால் ஆளப்படும் மனிதன்; மாயையால் ஓலமிடும் மனிதன்
தூயன்பு கொண்ட மனிதம் அரிது; துரோகம் அற்ற மனிதமும் அரிது
அவதாரமும் பெற்றது அவதி வாழ்வு; மனங்கெட்ட மனிதரால் அவல வாழ்வு
இறந்தும் இறவா நிலை பெருநிலை; வாழ்ந்தும் வாழா நிலை அவல நிலை
இருந்தும் இறைநிலை அடையலாம்; இறந்தும் இறைநிலை தொடரலாம்!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment