குறுக்கு நெடுக்காகப் பல ஓட்டு ஓட்டினால் மண்ணின் குழ குழப்பைக் கூட்டலாம்
மேடு பள்ளத்தைச் சீராக்கிச் சமன்படுத்த மகன் தந்தை சேற்றில் உழைக்கலாம்
கரத்தால் கயிற்றைப் பிடித்தாலும் கயிறே கழுத்தை அழுத்தி நெருக்கி இறுக்கலாம்
இழுக்கும்போது கழுத்து வலித்தாலும் வலிக்காதது போல் அப்பா இழுக்கலாம்
நவீன கலப்பைகள் பல இருந்தாலும் காசு இல்லையேல் பயன்படாதுப் போகலாம்
சாதித் தலைவர்கள் பலபேர் இருந்தாலும் சகதி அரசியலைத் தொடர்ந்து செய்யலாம்!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment