மாசில்லா உறவு
பூனை என்ன? கோழி என்ன? எல்லாம் ஓர் இனம்தான்
யானை என்ன? காக்கை என்ன? அதுவும் ஓர் இனம்தான்
சில கூடு கட்டி வாழும்; பல வானம் பார்த்து வாழும்
கோட்டை கட்டும் எண்ணமில்ல; பதுக்கி வைக்கும் எண்ணமுமில்ல
அன்னன்னைக்கு அன்னம் தேடும்; நிறைவான வாழ்க்கை வாழும்
போதும் என்று வாழும் மனம்; பொறாமை இல்லா நல்ல மனம்
மானை அடித்து சிங்கம் உண்ணும்; பசி தீர்ந்தா கொல்லாது இன்னும்
சேர்த்து உண்ணும் எண்ணம் இல்ல; கொள்ளை அடிக்க திட்டம் இல்ல
கொல்லும் புத்தி இருந்திருந்தா; சாவும் இனம் இன்னும் வாழ்ந்திடுமா?
எழுத்தில்லா மொழியில் பேசிடுமே; ஓசை கொண்டே வாழ்ந்திடுமே!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment