Sunday, 8 August 2021

விளையாட்டுக்காக விளையாட்டைப் பற்றி

 

விளையாட்டுக்காக விளையாட்டைப் பற்றி

முந்தியவர் பிந்துவதும் பிந்தியவர் முந்துவதும் விளையாட்டு

முந்தியவரை முடிந்த பின்பும் கொண்டாடுவது விளையாட்டு

பிந்தியவரை முடியும் முன்பே திண்டாட விடுவதும் விளையாட்டு

முயன்று வென்றவரை முடிந்தவரை போற்றுவோம் விளையாட்டுக்காக

முயன்றும் இயலாதவரை இயன்றவரை பாராட்டுவோம் விளையாட்டுக்காக!

- தஞ்சை த இராமநாதன்

No comments:

Post a Comment