Monday, 9 August 2021

நெஞ்சு பொறுக்குதில்லையே

 


நெஞ்சு பொறுக்குதில்லையே

அறியாதவரெல்லாம் அறிந்த அறிஞைரைப் போல் பிதற்றுவதைப் பார்த்தால் - நெஞ்சு பொறுக்குதில்லை பாரதி

பொல்லாதவர் புவியில் அதிகரிப்பதைப் பார்த்தால் - நெஞ்சு பொறுக்குதில்லை பாரதி

பயன் அடைந்தோரே நன்றி கெட்ட நயவஞ்சகர்களாக மாறுவதைப் பார்த்தால் - நெஞ்சு பொறுக்குதில்லை பாரதி

பணத்தை வைத்துதான் அங்கீகாரம் என்பதைப் பார்த்தால் - நெஞ்சு பொறுக்குதில்லை பாரதி

புகைப் பிடிப்பதோடு மதுவும் குடித்து ஆட்டம் போடும் பெண்டிரைப் பார்த்தால் - நெஞ்சு பொறுக்குதில்லை பாரதி

பாலியல் வன்முறைக் கயவர்கள் அதிகமான நிலையைப் பார்த்தால் - நெஞ்சு பொறுக்குதில்லை பாரதி

சாதி கூடாது என கோஷமிட்டு தன் சாதியின் பெயரிலேயே சங்கடங்களை செய்வதைப் பார்த்தால் - நெஞ்சு பொறுக்குதில்லை பாரதி!

ஆதாயத்திற்காக அசிங்கமான அரசியல் நடத்தும் ஆசாமிகளைப் பார்த்தால் - நெஞ்சு பொறுக்குதில்லை பாரதி

அகத்தின் அழுக்கை முகத்தில் காட்டாமல் நன்றாக நடிப்பவர்களைப் பார்த்தால் - நெஞ்சு பொறுக்குதில்லை பாரதி

எல்லாவற்றையும் விட...

சாமியாரானால் சம்பாதிக்கலாம் என்ற நிலையைப் பார்த்தால் - நெஞ்சு பொறுக்குதில்லை பாரதி

ஆமாம் பாரதி! 

"நெஞ்சு பொறுக்குதில்லையே - இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்" என்றீரே!

அது உண்மைதான் பாரதி!

- தஞ்சை த இராமநாதன்

No comments:

Post a Comment