அல்லல் படுத்தும் ஆசை
உள்ளத்தின் உள்ளலால் தேடுவது இன்பம்; உடலால் துள்ளி ஆடுவது இன்பமா?
தேடிய இன்பம் நிலைத்தது இல்லை; தேடியும் அது கிடைத்தது இல்லை
உடல் தேடும் இன்பம் பல வகை; உள்ளத்தின் பேரின்பம் ஒரே வகை
உள்ளம் திட தெளிவினால் ஆன்மா ஆனந்தம் பெறும் திடமாக
ஆசையாலே தேடுவர் இன்பமதை; ஆசையாலே பெறுவர் துன்பமதை
பாசக் கயிறும் அறுபட வேண்டும்; வேஷக் கயிறும் அறுபட வேண்டும்
வெளியில் கிடைப்பது கானல் சுகம்; உள்ளே இருப்பது தெய்வீக சுகம்
புத்தருக்கு சிலை யாருடைய ஆசை? கண்ணீரோடு சிலை விபரீத ஆசை
புத்தன் இறந்ததும் அவருக்கு மதம்; ஒவ்வொரு மகானுக்கும் ஒரு மதம்
மதத்தால் மகான்களைப் பிரிப்பதேன்? புனித ஆத்மாவை அழ வைப்பதேன்?
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment