Thursday, 5 August 2021

பலன் பல தரும் தரு

 

பலன் பல தரும் தரு

பூவோடு பூத்துக் குலுங்கிய மரம்; பருவத்தோடு காய் காய்த்த மரம்

குடையாகி நிழல் கொடுத்த மரம்; வீடாகிப் பறவையைக் காத்த மரம்

கிளையை வெட்டினால் வளரும்; தழையை வெட்டினாலும் வளரும்

இலையை வெட்டினாலும் வளரும்; தலையை வெட்டினால் வளருமா?

பெத்தப் பிள்ளை உம்மை விடலாம்; வைத்தப் பிள்ளை உம்மை விடாது

மருந்துக்கும் பயனாகும் நம் மரம்; விருந்துக்கும் பயனாகும் நம் மரம்

விலை பேசி வெட்டப்பட்ட மரம்; நிலையாகி கதவாகப் போகும் மரம்

இருந்தும் பயனோடு வாழ்ந்த மரம்; இறந்தும் பயனோடு வாழும் மரம்

வெட்டியாய் மரத்தை வெட்டாதீர்; வெட்டி வேலையை செய்யாதீர்

மரக்கன்று நட்டு மரமாக்குவோம்; மழை தரும் மரத்தோடு வாழ்வோம்!

- தஞ்சை த இராமநாதன்

No comments:

Post a Comment