Thursday, 5 August 2021

அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும்

 

அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும்

சாலைக்கு அந்தப் பக்கம் பசுமை; சாலைக்கு இந்தப் பக்கம் வறுமை

அந்தப் பக்கம் மட்டும் வாழ்வது அநீதி; இந்தப் பக்கமும் வாழ கிடைக்குமா நீதி?

அங்காவது விளைகிறதே மகிழ்ச்சி; இங்கும் விளைந்தால் அதி மகிழ்ச்சி

ஒரு சாராருக்கு மட்டும் வாழ்வு சோகம்; மறு சாராரும் சேர்ந்து வாழ்ந்தால் சுகம்!

ஒரு பக்கம் மட்டும் வாழ்வது அவமானம்; மறு பக்கமும் வாழ தேவை வருமானம் 

சேர்ந்து பகிர்ந்து வாழ்ந்தால் நேசம்; பிரிந்து ஒளிந்து வாழ்ந்தால் மோசம்!

- தஞ்சை த இராமநாதன்

No comments:

Post a Comment