Friday, 6 August 2021

எங்கெங்கு காணினும் பாரதியார்

 

எங்கெங்கு காணினும் பாரதியார்

குழந்தை விரும்பும் பாரதியார்; குமரனும் விரும்பும் பாரதியார்

பெண்கள் போற்றும் பாரதியார்; ஆண்களும் போற்றும் பாரதியார்

இளைஞர் பேச்சிலும் பாரதியார்; முதியவர் மூச்சிலும் பாரதியார்

மாநிலத்தாரும் வணங்கும் பாரதியார்; பாரதத்தாரும் வணங்கும் பாரதியார்

சாதி பிடித்தோருக்கும் பாரதியார்; சாதி வெறுத்தோருக்கும் பாரதியார்

புரட்சி செய்வோருக்கும் பாரதியார்; எழுச்சி பெறுவோருக்கும் பாரதியார்

புதுக் கவிதை பல தந்த பாரதியார்; புதுக் கவிஞர் பல தந்த பாரதியார்!

- தஞ்சை த இராமநாதன்

No comments:

Post a Comment