Thursday, 5 August 2021

உணர்வோடு அறிவு

 

உணர்வோடு அறிவு

மூளை கொண்டு பணம் பெறலாம்; இதயம் கொண்டு மனம் பெறலாம்

பலர் பணக்காரன் ஆகிறார் எளிதாக; சிலர்தான் குணக்காரன் அரிதாக

பணத்தைப் பூட்ட தாழால் முடியும்; மனதைப் பூட்ட தாழால் முடியுமா

மனதில் உறுதி கொண்டோர் மனிதர்; பணத்தில் குறி கொண்டோர் மனிதரா?

மூளைச் சாவிலும் மனிதன் வாழலாம்; இதயச் சாவால் வாழ முடியுமா?

இதயத்தோடு மூளை சேர்தல் நலம்; நல் மனதோடு பணம் சேர்தல் நலம்

அறிவு வேண்டும் ஆற்றலும் வேண்டும்; இனிமை கலந்த ஈகையும் வேண்டும்

உண்மை கலந்த ஊக்கம் வேண்டும்; எங்கும் நல்ல *இதயம்* வேண்டும்!

- தஞ்சை த இராமநாதன்

No comments:

Post a Comment