Wednesday, 4 August 2021

வேலைகள் பலவிதம்

 

வேலைகள் பலவிதம்

வெளியே ஓடி வேலைப் பார்த்ததும் நாம்; உள்ளே கூடி வேலைப் பார்ப்பதும் நாம்

வெளியே ஓட்டியே வேலைப் பார்த்ததும் நாம்; உள்ளே கூட்டியே வேலைப் பார்ப்பதும் நாம்

வெளியே முந்தி முந்தி நடப்பதும் நாம்; உள்ளே குந்திக் குந்தி நகர்வதும் நாம்

வெளியே கைபேசி கணினியோடு நாம்; உள்ளே கைபேசி துடைப்பத்தோடு நாம்

வெளியே பெருக்கச் சொல்வதும் நாம்; உள்ளே பெருக்கிக் கொள்வதும் நாம்

வெளியே பல அலுவலர்களோடு நாம்; உள்ளே பல அலுவல்களோடு நாம்

வெளியே நேரத்தில் சாப்பிட்டு நெளிவதும் நாம்; உள்ளே நேரத்தில் சாப்பிட்டு மகிழ்வதும் நாம்

வெளியே முகநக பழகும் மரபோடு நாம்; உள்ளே அகநக பழகும் உறவோடு நாம்!

- தஞ்சை த இராமநாதன்

No comments:

Post a Comment