தாய்க்கு தனயனின் வாழ்த்து
குடும்ப வளர்ச்சிக்கு பெரும் பங்களித்து இல்லார்க்கு இருப்பதை பகிர்ந்தளித்து
உறவினரிடத்தில் நல்லுறவை வளர்த்து உற்றாரிடத்தில் இணக்கத்தை வளர்த்து
சண்டை சச்சரவை முற்றிலும் தவிர்த்து அன்பால் எல்லோரையும் அரவணைத்து
பொறுமையுடன் பெருமையைச் சேர்த்த சிவக்கோழுந்தான தன் தாயைப் பார்த்து
தனயன் தந்தேன் தமிழ்த்தாய் வாழ்த்து!
- தஞ்சை த இராமநாதன்

No comments:
Post a Comment