நம்மாழ்வாரின் வழியே நல்வழி
இயற்கையாய் இருந்தது விவசாயம் செயற்கைக்கு மாறியது சமுதாயம்
செயற்கைக்கு மாறியது விவசாயம் இயற்கையை இழந்தது சமுதாயம்
முல்லை-மருதம் சேர்ந்து இருந்தது இயற்கை முல்லையைப் பிரித்து அழித்தது செயற்கை
மாளிகையான வயல்காடும் செயற்கை மாளிகையில் வாழ்வோரிடமும் செயற்கை
மாட்டோடு இருந்த விவசாயம் இயற்கை மாடே இல்லாத விவசாயமோ செயற்கை
அளவோடு விளைந்து வந்தது இயற்கை விலைக்காக விளைய வைப்பதோ செயற்கை
அரிசி வாங்கி வாழும் விவசாயி மாறணும் அரிசியால் வாழும் அரசியலை தூக்கி எறியணும்
வளத்தோடு மண்ணைக் காக்கணும் மானத்தோடு மண்ணை ஆளணும்
நம்மாழ்வார் வழியில் செல்லணும் நல்வழியில் விவசாயம் செய்யணும்!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment