Friday, 6 August 2021

அழிப்பவர் அதிகமான உலகம்

 

அழிப்பவர் அதிகமான உலகம் 

குண்டைப் போட்டு குற்றவாளி ஆனோர் குணமற்ற கொடூரக் குண்டர்கள்

குண்டைக் கண்டும் சண்டை இட்டோர் இணக்கமற்ற குண்டுக் கோழைகள்

ஆணவப்பட்ட குண்டு தாக்குதலால் அழியா அவப் பெயர் ஒரு புறம்

அவசரப்பட்ட தற்கொலை தாக்குததால் அழியா அவலப் பெயர் மறு புறம்!

நாடுகள் குண்டடிப்பட்ட பாதிப்பும் பாவப்பட்ட பொது மக்களுக்கே

நாடுகள் துண்டாக்கப்பட்ட பாதிப்பும் பாவப்பட்ட பொது மக்களுக்கே

ஹிரொஷிமாவை ஸீரோஷிமாக்கிய மனிதாபமற்ற செயல் இனி வேண்டாம்

நாகசாகியை நாசமாக்கிய இரக்கமற்ற இழிச் செயலும் இனி வேண்டாம்!

- தஞ்சை த இராமநாதன்

No comments:

Post a Comment