
வீரமான கட்டபொம்மன்
சிவாஜி கணேசன் மூலம் கண்டோம் கட்டபொம்மனை நாம் கண்டோம்
பாஞ்சாலங்குறிச்சியிலே ஒரு புரட்சி பயமறியாக் காளையர்களின் புரட்சி
தனக்கு சிங்கமான இரு தம்பிகள் அண்ணனுக்கு ஈடான இரு தம்பிகள்
ஒரு சிங்கம் ஊமத்துரையானார் மறு சிங்கம் துரை சிங்கமானார்
கற்றுக் கொடுப்பவர் நாம் என்றார் கற்பிக்க நீ முயலாதே என்றார்
வெற்றி வேல் வீர வேல் முழக்கம் பரங்கியரை பயமுறுத்திய முழக்கம்
உயிருக்குப் பயப்படாத வீர வேந்தன் மானத்தோடு மறைந்த வீர வேந்தன்
வரைந்த மீசையுடன் பள்ளி மேடையிலே நிறைந்த ஞாபகம் என் நெஞ்சினிலே!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment