ஆனந்தப் பயணம் ஆரம்பம்
மதம் மறைந்து மனிதம் வரட்டும்; வேற்றுமை மறைந்து ஒற்றுமை வரட்டும்
சடங்கு போய் சங்கமம் வரட்டும்; பகைமைப் போய் பந்தம் வரட்டும்
எங்கும் இறைவனை நாம் காணலாம்; நன் மக்களிலும் அவனைக் காணலாம்
இரத்த உறவிலும் நல் உறவுண்டு; மத்த உறவிலும் நல் உறவுண்டு
மதம் முடிய ஆன்மீகம் ஆரம்பம்; ஆன்மீகம் முடிய உண்மை ஆரம்பம்
உண்மை முடிய ஆனந்தம் ஆரம்பம்; ஆனந்தம் நோக்கியப் பயணம் இங்கே...
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment