வீரத்தாய்
சிவகங்கை தந்த வீரமான மங்கை மறத் தமிழரின் தன்மான நங்கை
வேல் ஏந்தினார் வேலு நாச்சியார் கதி கலங்கினார் அந்நிய ஆட்சியார்
உருது சகோதரர் ஆதரவும் பெற்றார் மருது சகோதரர் ஆதரவும் பெற்றார்
நாச்சியாரோடு மங்கையர் படை வாளும் ஏந்தினர் போர்க் களத்திலே மங்கையரும் உயிரை நீத்தனர்
தன்னுயிர் நீத்து தரணியைக் காத்தனர் மானத்தோடு மண்ணைக் காத்தனர்
தற்காப்புப் படையில் மானமிகு மங்கையர் பலருண்டு தற்கொலைப் படையிலும் மடிந்தவர் பலருண்டு
முறம் கொண்டு புலியை அடித்தவரும் பலருண்டு படை கொண்டு பலியைத் தீர்த்தவரும் பலருண்டு!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment