Friday, 9 July 2021

இவர்தான் மனிதன்

 

இவர்தான் மனிதன்

எழ முடியாமல் ஒரு வர்க்கம்!

எழ விடாமல் மறு வர்க்கம்!

படுத்தே வாழுது ஒரு வர்க்கம்!

படுக்க இடமேயில்லா மறு வர்க்கம்!

கட்டாந்தரை கொடுக்குது தூக்கம்!

மெத்தை கொடுக்காத அத்தூக்கம்!

பசித்து பசிதீரா சாப்பாடு பலருக்கு

பசியாமல் புசிய சாப்பாடு பலருக்கு!

ஒரு கண் பார்வையில் தளர்வு!

மறு கண் பார்வை இல்லா தளர்வு!

கண்ணாடி கூட இல்லாத பார்வை!

கண் கூர்மை மிக்கப் பார்வை!

பூச்சில்லா மண் சுவர் காவல்!

மண் சுவராகி கடவுளே காவல்!

காசில்லா கஷ்ட வாழ்க்கை இங்கே!

மாசில்லா இஷ்ட வாழ்க்கை எங்கே?

கோயில் உண்டியலில் பல கோடி!

பாவம் போக்கும் பலபேர் கேடி!

பொன் காசு கொடுக்காது மிடுக்கு!

நம்மவர் தாடி மீசையோடு மிடுக்கு!

- தஞ்சை த இராமநாதன்

No comments:

Post a Comment