கரிகாலனின் கல்லணை
சோழ வளநாட்டில் கல் அணை!
கல்லை நட்டு நாட்டிய அணை!
கல்லே இல்லா நாட்டில் கல்லணை!
கள்ளமிலா இன மக்கள் கல்லணை!
வெள்ள நீரை அணைக்க அணை!
கொள்ளா நீரை கொள்ளவும் அணை!
கொள்ளிடம் போய் சேரும் அணை!
நீரடித்து நீர் விலகா அவ்வணை!
பாறை களி பாறையால் அணை!
பாறையாகி பார்புகழ் பெற்ற அணை!
மூவேந்தர்களை வென்றவர் அணை!
முக்கொம்பில் பிரிந்த இந்த அணை!
வண்டலே அரணாக ஆன அணை!
அதை வயலில் உரமாக்கிய அணை!
பாட்டன்களின் மெஞ்ஞான அணை!
விஞ்ஞானமும் வியக்கும் தமிழணை!
உலகில் மூத்த அணை கல்லணை!
மூத்தக் குடி ஆளுமை கல்லணை!
கரிகால் மன்னன் கண்ட கல்லணை!
காவிரி நீர் அணைய கல்லணை!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment