குடும்பமும் குடும்ப வாழ்க்கையும்
கூட்டோ அல்லது தனியோ குடும்பமாக வாழ்ந்தால் குடும்பத்தினருக்கு அழகு!
கூட்டுக் குடும்பத்தில் குறையில்லாமல் வாழ்ந்தாலும் குடும்பத்தினருக்கு அழகு!
தனிக் குடும்பத்தில் நிறைவோடு வாழ்ந்தாலும் குடும்பத்தினருக்கு அழகு!
கெட்டும் பட்டணம் போ என்று சொல்லி விட்டு கூட்டுக் குடும்பம் சாத்தியமா?
எலி வளையானாலும் தனிவளை என்ற பிறகு கூட்டுக் குடும்பம் சாத்தியமா?
தனிக் குடும்பம் சென்றோரை கூட்டுக் குடும்பத்தார் ஒதுக்குவது நியாயமா?
அப்படி ஒதுக்கி வாழ்வோர் தங்களை கூட்டுக் குடும்பம் என்பதும் நியாயமா?
தனியாக வாழ்ந்தாலும் குடும்பப் பண்போடு வாழ்வதும் சிறப்பே!
கூட்டாக வாழ்ந்தாலும் குடும்ப உணர்வோடு வாழ்வதும் சிறப்பே!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment