Monday, 5 July 2021

தாரோடு தார் சாலையில் பயணம்

 

தாரோடு தார் சாலையில் பயணம்

விளைந்தத் தாரோடு வண்டி விரைந்து செல்லுவது தார் ரோடு!

வளைந்தத் தாரோடு வண்டி தொடர்ந்து செல்லுவது கார் ரோடு!

காயாய் இருந்தாலும் தாருக்குப் பெயர் வாழைப் பழத் தாருதான்!

ஊராய் இருந்தாலும் சாலைக்குப் பெயர் கருப்புத் தார் சாலைதான்!

தார் தாராய் அடுக்கிச் சென்றாலும் விலை பேசுவர் தாறுக்கு மாறாய்!

தார் கனமில்லையே என பொய் சொல்லுவர் ஒவ்வொரு தாராய்!

தார்களுக்கு மேலே காத்தாட அமர முகக் கவசத்தோடு ஏற்பாடு!

தார்களுக்குக் கீழே காலாட அமர்ந்து முகக் கவசத்தோடு புறப்பாடு!

- தஞ்சை த இராமநாதன்


No comments:

Post a Comment