நாணமுடன் சிரிப்பு
ஒளி படைத்தக் கண்ணும் கல் ஒல்லி இடையாள் உடலும் கல்
நேர்த்தியான நெற்றிப் பொட்டும் கல் மின்னும் இத் தொங்கட்டானும் கல்
நாணமுடன் சிரிக்கும் உதடுகள் கல் கனமுடன் கழுத்தின் அட்டியல் கல்
குத்தாமல் குத்திய காதோ கல் குத்தாமல் குந்திய மூக்குத்திக் கல்
மூடியிருக்கும் முத்தான பல்லும் கல் முடியை மூடியிருக்கும் முத்தும் கல்
குழியற்ற தக்காளிக் கன்னம் கல் அளவான குழியுடன் தாடையும் கல்
ஆபரணம் ஆடை எல்லாம் கல் அபாரமான மேடை அதுவும் கல்
ஆணால் செதுக்கப்பட்ட பெண் கல் ஆனால் பெண்ணால் சிறந்தக் கல்
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment