கை பிடித்தவரை கை பிடித்தவர்
கை பிடித்து கை கொடுத்து நடக்கும் நடை கை பிடித்தவரை கை பிடித்து நடக்கும் நடை நடந்தப் பாதையில் நிமிர்ந்து நடக்கும் நடை கடந்தப் பாதையில் தொடந்து நடக்கும் நடை
வாழ்க்கைப் பயணத்தில் சில மேடு பள்ளம் வழிப் பயணத்தில் பல ரோடு பள்ளம் பல நூறு உறவினர் அவங்க சொந்தம் பல ஆயிரம் உற்றார் அவங்க பந்தம்
நண்பர்களோடு கதையைக் கதைக்க நாட்டம் அன்பர்களோடு இசையை இசைக்கத் திட்டம் நடக்கும் வழியில் நடக்குது ஒரு நோட்டம் கடக்கும் வழியில் இருக்குது ஒரு தோட்டம்!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment