இறக்கப் பிறந்தாய் இரக்கம் கொள் சொல்லோடு அல்ல செயலோடு நில்
குற்றம் பார்க்காத நல்ல உள்ளம் சுற்றம் மனதில் நிலை கொள்ளும்
இறந்தும் இறவாதவர் மனதில் வாழ்க அன்பால் விளையும் ஆற்றல் பெறுக
தண்டனைத் தராத மனமே வருக மன்னித்து வாழ வாய்ப்பைத் தருக
அவமானம் பொறு சன்மானம் தரும் குற்றமற்ற மனம் இறையருள் பெறும்
புன்னகை அன்பின் முதல் ஊற்று இவையாவும் அன்னையின் கூற்று!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment