Sunday, 6 June 2021

நடு நடுங்கிய இளஞ்செடி


நடு நடுங்கிய இளஞ்செடி

காட்டை அழித்து காசைச் சேர்த்து
வீட்டைக் கோட்டை ஆக்கினோம்
நீர்நிலையை அழித்து கோட்டைக் கட்டி 
கேட்டைப் பெருக்கினோம்

செயற்கையை விட்டு இயற்கையை
வணங்க வேண்டியவர்கள் நாம்
இயற்கையை விட்டு செயற்கைக்கு
சென்று துன்பப்படுபவர்கள் நாம்

அன்று காக்கைக் குருவி மலை
மனிதர் எல்லாம் நமது சாதி!
இன்று துரோகம் காமம் கொலை பொய் 
எல்லாம் யாரோட சதி?

நடிப்புக்குத் தேவை ஆயிரம் படம்
இன்று வரை பகட்டு அழகானதால்!
உண்மைக்குத் தேவை நல்ல பாடம்
ஆதி முதல் மெய் ஊமையானதால்

செருப்புக்கு அடியில் ஒரு விரல்
இது படத்திற்கான நிகழ்ச்சி நிரல்
நடு நடுங்கிக் கேட்குது ஒரு குரல்
அது வளரும் இளஞ்செடியின் குரல்! 

- தஞ்சை த இராமநாதன்

No comments:

Post a Comment