Monday, 7 June 2021

பெருமையைப் புதைக்கலாமா சிறுமை ?

 

சேலைகட்டி மண்ணில் மேழிப் பிடிப்பது ஏற்க முடியாத சிறுமை                                    மாலைகட்டி போற்ற நினைத்தாலும் ஏற்காது மண்ணின் பெருமை

உழவில் சேயைச் சுமந்ததால் பெண்ணுக்குச் சேருமா பெருமை?                                                  சேற்றில் உணர்வு சேராததால் ஆணுக்குச் சேராதா சிறுமை?

இதனை இதனால் இவன் முடிப்பானென ஆராய்ந்தது பெருமை                                            இதனால் எதனை இவள் முடிப்பாளென ஆராயதது சிறுமை

மாடுகட்டினால் மாளாதென்று யானைகட்டி போரை அடித்தது பெருமை                                    மாடுகட்டி பெண்ணை ஏர்பிடிக்க வைத்து பேரைக் கெடுத்தது சிறுமை!

- தஞ்சை த.இராமநாதன்

No comments:

Post a Comment