கை கோர்த்து எட்டா இலக்கை எட்டிவிடும் முட்டி இட்டு எட்டா நிலையை எட்டிவிடும்
சாதிகளை எல்லாம் எட்டி உதைத்து விடும் அநீதிகளை எல்லாம் கூட்டிப் புதைத்து விடும்
பண்போடு பணிவைக் கொடுத்து விடும் அநியாய ஆணவத்தை எடுத்து விடும்
உடலும் உள்ளமும் வலிமைப் பெற்று விடும் அகமும் புறமும் பொலிவைப் பெற்று விடும்
பந்த பாசத்தோடு பரிவை இணைத்து விடும் உண்மை உறுதியோடு உணர்வைப் பிணைத்து விடும்!
தஞ்சை த இராமநாதன்

No comments:
Post a Comment