ஆடிப்பாட முடியாத மிதிபட்ட படி ஒரேபடியில் அமர முடியாத படி
படியின் ஓரோரம் இல்லை கைப்பிடி வலதோரம் அமர்ந்தனர் காரணப்படி
அகத்தில் இருக்கு நீருக்கு ஏக்கம் புறத்தில் இருக்கு பேருக்கு வெட்கம்
கூடியதால் பெற முடிந்த மகிழ்ச்சி கோடியால் பெற முடியாத நிகழ்ச்சி
கால் கடுத்ததால் இங்கே அமர்ந்தனரா? ஆள் தடுத்ததால் இங்கே அமர்ந்தனரா?
படிக்காக இப்படத்தை எடுத்தனரா? படத்திற்காகப் படியைக் கொடுத்தனரா?
இறங்க வேண்டும் படியில் ஏறியபடி இறங்கிய கடைப்படியே ஏறிய முதற்படி
குடமிரண்டும் காத்திருக்கு நீருக்கு குடும்பமே காத்திருக்கு சோறுக்கு
நீவிர் அலையக் கூடாது இம்மாதிரி நீருக்கு நீரைப் பிடிக்கப் புறப்படுவீர் நம் boreக்கு!
- தஞ்சை த.இராமநாதன்

No comments:
Post a Comment