Tuesday, 8 June 2021

வேளைப் பார்க்காத மாடு

 

பணிவான பண்போடு வலிமையான மாடு பலனை எதிர்பாராத அருமையான மாடு

மாட்டின் இயற்கையான வீடுதான் காடு              இயற்கையான காடு போனதால் வீடேதான் காடு 

மாடு மனிதரிடம் படுவது படாத பாடு                    மாட்டின் உழைப்பால் விடாது வாழுது வீடு

நேரம் வேளையைப் பார்க்காது மாடு        எந்நேரமும் வேலையைப் பார்க்கவே மாடு

ஆள் இல்லையேல் அயராமல் ஓடும் மாடு          ஆள் இருந்தால் அயர்ந்தாலும் ஓடும் மாடு

புல் சுமந்தால் எளிதாக இழுக்கும் மாடு              கல் சுமந்தால் கடினமாக இழுக்கும் மாடு

அம்மா என்று அர்த்தத்தோடு கத்தும் மாடு    சும்மா என்றுமே அர்த்தமற்று கத்தாது மாடு

மாட்டோடு வாழ்ந்தால் அது விபரமான வீடு ஓட்டோடு வீழ்ந்தால் அது விபரமற்ற நாடு!

(குறிப்பு: ஓட்டு = வாக்கு)

- தஞ்சை த இராமநாதன்



No comments:

Post a Comment