Tuesday, 8 June 2021

சாமி

 

சாமி

காசேதான் கடவுளா? இல்லை!

மனசேதான் கடவுள்! உண்மை!

மனதால் இவர் உண்மைக் கடவுள்!

ஆகக் கட உள் - கடவுள்!

பலபேர் உள்ளே பிச்சைக் காரன்!

வெளியே கேவல இச்சைக் காரன்!

இவர் கோடியில் இருக்கும் சாமி

இவரைக் கைகூப்பி வணங்கும் பூமி!

வெடி போட்டு கூத்துக் கும்மாளம்!

கொடி பிடித்து குடித்துக் கும்மாளம்!

காசுக்காக வாய் இளிக்கும் கூட்டம்!

கொரோனாவிலும் காசே திட்டம்!

இயற்கையைச் சீண்டுது செயற்கை!

உம் செயற்கை வீழ்வதும் இயற்கை!

இயற்கையை ஒத்து வாழ்வோம்!

அன்பான மனிதம் காத்து வாழ்வோம்!

- தஞ்சை த இராமநாதன்


No comments:

Post a Comment