பெண்ணுரிமை பெற்றதால் மகிழ்ச்சி கிளியுரிமை பறித்ததால் இகழ்ச்சி
அக்கிளியை அடைத்தாள் மாது எக்கிளியை அடைத்தாலும் தீது
தெரு ஓரத்தில் பகுத்தறிவுக் கூட்டம் மறு ஓரத்தில் கிளிக்காகக் கூட்டம்
கிளியை வைத்து ஒரு போதனையா? வாழ்வில் இதெல்லாம் ஒரு சாதனையா?
வதையால் கிளிக்கு மன வேதனை சதையால் புவியில் இன சோதனை
கிளியிடம் சாதகம் பார்ப்போர் சிலபேர் கிளுகிளுப்போடு பார்ப்போர் பலபேர்
கிளிகளுக்கும் இருக்கின்றது கிலி பழிகளுக்கு ஆளாக வேண்டாம் பலி
சாதகமாகப் பொய்ச் சொல்லுவோர் பலபேர் பாதகமாயினும் மெய்ச் சொல்லுவோர் சிலபேர்
பொய் சொல்லி வாழ்வோர் திருந்திடுக மெய்ச் சொல்லி வாழ்வோர் திருத்திடுக!
- தஞ்சை த இராமநாதன்

No comments:
Post a Comment