காயாலான காய்க்கார அம்மா சிவந்த அவரைக் காயால் அழகாய் ஆனாய் அம்மா வெட்டப்பட்ட காயின் உடலோ தப்பாதம்மா வேக வைத்துக் கறி ஆகாமல் போகாதம்மா
காயாலான காய்க்கார அப்பா எப்போதுமே எங்கும் கண்டதே இல்லையே அது ஏனம்மா?அழகான பெண் சாதிக்கு அது பாதகமா? அகங்காரமான ஆண் சாதிக்கு இது சாதகமா?
காலமோ மாறிக் கொண்டே போகின்றது விலையோ ஏறிக் கொண்டே போகின்றது கூடையோடு வந்தால் பேரம் ஊறிப் போச்சு கடைக்குச் சென்றால் பேரம் ஆறிப் போச்சு
கடையில் இருக்கு பழுத்தப் பாகற்காய் கூடையில் இருக்கு புதிதாய்ப் பறித்தக்காய் உழைத்து வாங்கம்மா மகனுக்குச் சொக்காய் உயர்ந்து வாழ்வான் உன் மகன் சோக்காய்!
- தஞ்சை த.இராமநாதன்

No comments:
Post a Comment