ஓடும் இரயிலில் இருந்தால் நாம் ஆடுவது போல் இருந்தாலும் எண்ணத்தால் கூட நாம் ஓடுவது போல் உணர்வதும் இல்லை
ஓடிய இரயிலில் நாம் இருந்ததை எண்ணி எண்ண ஓட்டத்திலேயே நாம் ஓடியதைப் போல் உணராமல் இருப்பதும் இல்லை
கரியைக் கொளுத்தி புகையைப் போக்கிய இரயிலில் சென்றது நாம் மறக்க முடியாத கடந்த கால எரிந்து முடிந்த கரியின் கதை
மின்சாரத்தில் இயங்கி வேகத்தைப் பெருக்கி இரயிலில் சென்று நம் கால் கடுக்க நின்றே செல்வது நாம் கடக்கும் விதியின் கதை!
- தஞ்சை த.இராமநாதன்

No comments:
Post a Comment