Thursday, 10 June 2021

நம் மண் நம் மக்கள்

 

நம் மண்ணோடு ஒன்றி வாழ்வது நற்காலம்    நம் மனித வாழ்வு பெற்றிடுவது பொற்காலம்

நம் மண்ணைக் காத்தால் என்றும் வாழ்வு      நம் மண்ணை மறந்தால் என்றும் தாழ்வு

நம் மண்ணுக்கு ஏற்றத் தொழிலால்  ஏற்றம்  நம் மண்ணை மாற்ற நினைத்தால் ஏமாற்றம் 

எங்கெங்குக் காணினும் இந்த மண் ஒன்றே  என்றுமே சொந்தக் காணி மண் நன்றே 

நாம் மண்ணோடு மண்ணாகும் முன்னே    நாம் உணர்வோடு ஒன்றாவோம் அதற்கு முன்னே!

- தஞ்சை த இராமநாதன்

No comments:

Post a Comment