படிப்பது அழகு
புத்தகத்தைக் குழந்தை படிப்பதும் அழகு புத்தகத்தைக் குழந்தை பிடிப்பதும் அழகு கை பேசி இல்லாது இருப்பதும் அழகு பிடித்ததைப் பிடித்தபடி படிப்பதும் அழகு பிஞ்சு முகத்தில் கொஞ்சச் சொல்லும் அழகு கொஞ்சி சிரித்தால் மெருகேற்றிடும் அழகு பஞ்சு மெத்தையில் மிருதுவான பிஞ்சு அழகு கெஞ்சிக் கேட்பதிலும் மிஞ்சிடும் அழகு புத்தக வெளிப் புறத்தில் வெற்றி அழகு படித்து அகம் தெளிந்தால் முற்றிலும் அழகு படம் பார்த்து பாடம் கற்பதிலும் அழகு படம் காட்டுவோருக்குப் பாடம் கற்பிப்பதோ அழகிலும் அழகு!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment