அரிதிலும் அரிது அரிதிலும் பெரிது
ஆணவம் அற்ற ஆடவரும் அரிது ஆடம்பரம் அற்ற பெண்டிரும் அரிது ஆளுமை மிக்க அரசும் அரிது ஆரோக்கிய மிக்க வாழ்வும் அரிது
இவ்வுலகில் மானிடராய்ப் பிறப்பாரும் அரிது இருக்கும் போது கொடுப்பாரும் அரிது இறக்கும் போது அழாதாரும் அரிது இருந்தே இறப்பாரும் அரிதிலும் அரிது
ஈகைக் குணம் உள்ளோரும் அரிது ஈதல் செய்யும் குலத்தோரும் அரிது ஈரம் வற்றா உள்ளங்களும் அரிது ஈரடி வழியில் வாழ்தலும் அரிது
உண்மைப் பேசி வாழ்வோரும் அரிது உறுதி மிக்க நெஞ்சினோரும் அரிது உழைத்து மட்டும் உயர்ந்தோரும் அரிது உலக நல்வழியை அறிந்தோரும் அரிது
ஊனத்தை உள்ளினுள் கொள்ளாரும் அரிது ஊனத்தைப் பழியா நல்லாரும் அரிது ஊனத்தை மாற்றும் விஞ்ஞானியும் பெரிது ஊனத்தைத் தேற்றும் விஞ்ஞானமும் பெரிது!
- தஞ்சை த இராமநாதன்

Super...👍
ReplyDelete