தாயை ஆயி என்றாலும் தாயி என்றாலும் அம்மா உறவுதான் உயர்வானது எந்நாளும்
உடை மாறினாலும் அம்மா உறவு ஒன்றே காலம் மாறினாலும் அம்மா உணர்வு நன்றே
கட்டி அணைத்துக் காப்பதும் அம்மா இனம் மெல்லக் குட்டி கண்டிப்பதும் அம்மா மனம்
நூலைப் போல சேலை என்பார் நூற்பார் தாயைப் போல பிள்ளை என்பார் பார்ப்பார்
முன் பேசி சோதிப்பர் தாயின் நற்குணத்தை பின் பேசி சாதிப்பர் சேயின் திருமணத்தை!
- தஞ்சை த இராமநாதன்

Arumai..
ReplyDelete