நல்வழி நலம்
உடலோடு உள்ளத்திலும் தூய்மை முகத்தோடு அகத்திலும் தூய்மை
உடல் மனம் ஆன்மாவின் தொடர்பு வேர் தண்டு இலையின் தொடர்பு
ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை நற் பண்பில்லாமல் உயர்வில்லை
சங்கம மனதில் அமைதி நிலை சத்திய நிலையில் ஆனந்த நிலை
சாதிக் கட்டு அறுபடல் நலம் மதப் போதை எடுபடல் நலம்
மனித நெறி ஆற்றல் பெறல் நலம் மனதின் வழி அருள் பெறல் நலம்!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment