லட்சியவாதி
சிங்க மனம் பகத் சிங்கிடம் பகட்டான மனம் பல அசிங்க மனிதரிடம்
வட நாட்டு வீர இளைஞன் பகத் சிங் பாரத நாட்டு தவப் புதல்வன் பகத் சிங்
கோபம் நிறைந்த குணமுடையோன் வீரம் நிறைந்த நெஞ்சுடையோன்
பல லட்சாதிபதி கால் வருடிகள் இங்கே சில லஜபதி லட்சியவாதிகள் எங்கே?
பண நகை நட்புகள் இங்கே மன நக நட்புகள் எங்கே?
உரிமைமிகு உணர்வுடன் தேச உணர்வு உயிரிணை நேசத்துடன் பாச உணர்வு!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment