எஃகென எண்ணுதலே பலம்
தாளாத துன்பம் தயங்காது தாக்கினாலும்
தளராது தாங்கும் மனதைக் கொள்
கோடி கேடிகள் (திருடர்கள்) கூடி தொல்லை கொடுக்க நினைத்தாலும்
கூடிய பலத்தோடு தடுத்து நிறுத்திடும் திறன் கொள்
உருக உருக பேசி உருக்கி பொறுக்கி எடுத்தோட எண்ணினாலும்
பொறுக்கியைப் பொறுக்கவைக்கும் திடத்தோடு எதிர்கொள்
மத வெறியில் சுடுவோரை சுடவிடாது
சாதி வெறியில் வெட்டுவோரை வெட்டவிடாது
எஃகாக தடுத்து நில்!
- தஞ்சை த.இராமநாதன்
- தஞ்சை த.இராமநாதன்

நன்றி. கேடி யை தமிழ் படுத்தி எழுதினால் நன்றாக இருந்து இருக்கும்.
ReplyDelete👍
Deleteமிக அருமை! 👌
ReplyDelete👍
Delete