கனவை நனவு செய்
பாறையின் கல்மலை உச்சியில் பீறிட்டு உருண்டு புரண்டோடி
சாரலோடு அருவியாய்க் கொட்டும் வெண் நீரைக் கனவில் கண்டால் நனவிலும் நனைந்து குளிக்கலாம்
சிங்காரச் சென்னையிலே மயிலைச் சாலையிலே பழங் குளக்கரையிலே ஈஸ்வரனைக் கனவில் கண்டால் நனவிலும் கபாலீஸ்வரனைக் காணலாம்
விதையை விதைத்து களையைப் பறித்து பயிரை வளர்த்து அறுவடை பண்ணும் முன்னே வெள்ளம் அடித்து கொண்டு செல்வதாக கனவில் கண்டால் நனவிலும் காணலாம்
ஊழலற்ற அரசியல்வாதி உருவாகி விட்டதாய் கனவில் கண்டாலும் நனவில் காண முடியுமா?
- தஞ்சை த.இராமநாதன்

No comments:
Post a Comment