அப்பாவின் அன்பு (என்னைப் போல் என் பிள்ளை கஷ்டப்படக்கூடாது)
பார்த்ததும் தெரியும் தாயின் அன்பு
பார்த்தாலும் தெரியாது அப்பாவின் அன்பு
மழையில் நனைந்து வந்தால்... முந்தானையைக் கொண்டு துவட்டி விடுவார் அம்மா
அதட்டித் திட்டி குச்சியால் அடித்து விடுவார் அப்பா
படிப்பது சரியில்லையெனில்...
அடுத்த தேர்வில் பார்த்துக் கொள்ளலாம் என்பார் அம்மா
மாடு மேய்க்க கூட லாயக்கில்லை என்பார் அப்பா
திருமண ஏற்பாட்டின்போது...
என் பிள்ளையைக் கட்டிக் கொள்ள கொடுத்து வைத்திருக்கனும் என்பார் அம்மா
சம்பாதிக்காத இவனை கட்டிக் கொள்ள எந்தப் பெண் சம்மதிக்கும் என்பார் அப்பா
திருமணம் ஆனபின்...
காலமும் ஓடும் வயதும் ஓடும்
அப்பாவானபின் அப்பாவின் நினைப்பு ஒரு நாளாவது ஆழமாக ஓடும்
கண்ணீர் மல்க அப்பா அப்பாவென அழத் தோன்றும்
அப்போது அப்பா படமாக இருந்தாலும் அழாதேடா என சொல்வதைப் போல் பாடமாக இருப்பார்!
- தஞ்சை த.இராமநாதன்

உண்மை தான்...அப்பாவின் பாசம் ஒரு போதும் தெரியாது...பட்டால் தான் புரியும்...
ReplyDelete🙏🙏
DeleteNalaa Iruku sir....
ReplyDelete🤝🤝
Deleteகண்ணீரில் அப்போதே தெரியும் அன்பு
ReplyDeleteகண்டிப்பில் எப்போதோ புரியும்
👍👍
Deleteஅருமை... அப்படித்தான் எனக்கும். நினைக்காத நானில்லை. ஊக
ReplyDelete🙏🙏
Delete