Sunday, 7 September 2025

காந்தி கண்ணாடி

 

காலக் கண்ணாடி நம் கண்முன் ஓடி நினைவுகளைக் காட்டும் பின்னாடி
வயதாகிப் பார்க்கும் நிலைக் கண்ணாடி
நினைவுகளைக் கூட்டும் நம் முன்னாடி

அன்று இளமையோடு உணர்வைக் கூட்டியதோ முகம் காணும் கண்ணாடி
இன்று முதுமையோடு உண்மையைக் காட்டுவதோ அகம் காட்டும் கண்ணாடி

இளமையில் கண்ணாடி போடாது கண்ணாடியைப் பார்ப்பதில் கில்லாடி
முதுமையில் கண்ணாடிப் போட்டு கண்ணாடியைப் பார்ப்பதோ தள்ளாடி

காந்தி கண்ணாடியோடு திரளாகச் சென்று நாட்டுக்குச் சுதந்திரத்தைத் தேடினார்
இன்று திரளாக திரையரங்கம் சென்று  திரையில் காந்தி கண்ணாடியைத் தேடினர்!

- தஞ்சை த.இராமநாதன்

8 comments: