Friday, 26 September 2025

ஒரே கல்லில் பல மாங்காய்

 

குறிப் பார்த்து அடித்தால் ஒரே அடியில் பல மாங்காய் விழுவதைக் கண்டோம்
உடையாது மாங்காய் விழுந்தாலும் உடைத்து உப்பிட்டு உண்டோம்

குறிப் பார்த்து அடித்த அடுத்த நொடியில் பழ மாங்கனி விழுவதையும் கண்டோம்
பட்ட மணலை வாயில் படாதவாறு ஊதிக் கழுவி சுவைத்து உண்டோம்

கல்லையும் மறந்து மரத்தையும் துறந்து கடல் கடந்து வானில் பறந்து வந்தோம்
வந்தாலும் வந்த பாதையை மறக்காது கல்லோடு மாங்காயைப் பாட வந்தோம்

மண்ணை மறந்தது மறந்ததாக இருந்து விண்ணில் பறப்பது தொடர்வதாக இருந்தால்
அது மண்ணில் வாழ்வோருக்கு விருந்தாக இருந்தால்
அவர்கள் மண்ணின் மணமுள்ள மைந்தர்களாக இருக்க முடியுமா?

- தஞ்சை த.இராமநாதன்

6 comments: