Saturday, 19 July 2025

ஆம்பலாப்பட்டின் புதல்வர் முன்னாள் மருத்துவக் கல்லூரி முதல்வர் Dr. A.M ஜெயராமன் M.D., D.D.,

 

முருகையா மாதிரார் அம்மணி அம்மாள் பெற்றெடுத்த கடைக் குட்டி                பேராசிரியர் முனைவர்.முத்துசாமியின் தம்பியான இவர் படிப்பில் படு சுட்டி 

ஆம்பலாப்பட்டு மண்ணின் முன்னோடி மருத்துவர்களில் முதன்மையானவர் ஆம்பலாப்பட்டு மண்ணின் முன்னோடிகளில் முதலில் மருத்துவக் கல்லூரி முதல்வரானவர் 

தோல் மருத்துவத்தில் தனிச்சிறப்போடு புகழ் அடைந்திடும் சாதனையாளர்                          தன் மகத்துவத்தைத் தன்னடக்க குணத்தோடுக் காத்திடும் பண்பாளர் 

உழைத்து வாழ்வோரை உள்ளன்போடு புகழ்ந்து போற்றுவார்                                    படித்து உயர்வோரைப் பேரன்போடு போற்றிப் பாராட்டுவார்

அமைதியோடுச் சென்னையில் வாழும் ஆம்பலாப்பட்டு Dr.A.M.ஜெயராமன் M.D.,D.D.,  அற்புதமான மனிதர்                                உரிமையோடுச் சொன்னால்  எனக்குச் சொந்த சின்ன மாமா இம்மாமனிதர்!

- தஞ்சை த.இராமநாதன் 

4 comments: