Thursday, 17 April 2025

வரவேற்பு இல்லாத வரவேற்புரை

 

இரவில் உறங்கி காலையில் எழ உறுதி சொல்ல முடியாதவர்களே வணக்கம்
இருப்பதே காணாமல் போகும்போது இல்லாததைக் காணப் புறப்பட்டவர்களே வணக்கம்

சொத்துக்காகப் பாசத்தை மறந்த பந்தத்தைத் துறந்த மன நோயாளிகளே வணக்கம்
பொய்யான பேச்சை வீச்சோடும் மெய்யான பேச்சைக் காற்றோடும் பறக்க விடும் பகட்டுப் பயல்களே வணக்கம்

அறிவற்று ஆணவப் போக்கில் ஆடும் முரட்டு முட்டாள் பயல்களே வணக்கம்
வெட்டிக் கொல்வதை வெற்றி கொள்வதாக எண்ணும் வெட்டிப் பயல்களே வணக்கம்

தமிழ்ப் பண்பாட்டைத் தாழ்த்தி வீழ்த்தி அதை மூடி மறைக்க முழக்கமிடும் வேடதாரிப் பெண்களே வணக்கம்
முதியோர்கள் இல்லம் கூடிடவும்  இல்லத்தினர் உள்ளம் குறுகிடவும் அதிகளவு காரணமான சுயநல பெண்களே வணக்கம்

வணக்கமென்ற சொல்லைச் சொல்லச் சொல்ல மெல்ல மெல்ல செல்ல ஆரம்பித்து வேகமாகவே சென்றவர்களே உங்களுக்கே வணக்கம்!

- தஞ்சை த.இராமநாதன் 

No comments:

Post a Comment