சொந்தங்கள் நினைவோடு தீபாவளி
நல்ல உயரமாக வளர்ந்த அத்தை
லஷ்மி அத்தையெனும் பெரிய அத்தை
லஷ்மணன் மாமாவை மணந்த அத்தை
உறவின் உணர்வை மதித்த அத்தை
சரிசமமாக அமர்ந்து ஆடு புலி ஆட்டம் ராமு பெரியப்பாவோடு ஆடிய ஆட்டம்
புளிய மரத்தடியில் சீட்டு ஆட்டம் அது நாராயணன் மாமா அண்ணாமலைப் பெரியப்பா ஆகியோர் ஆடிய ஆட்டம்
போண்டா வாங்கித் தந்து அன்போடு அரவணைப்பார் சாயா தாத்தா
மீன் பரியும் பறவைக் கண்ணியும் செய்திடுவார் அடைக்கலம் தாத்தா
சிரித்துப் பேசி நாட்டுத் துப்பாக்கியோடு கலக்கிடுவார் குப்புசாமி தாத்தா
கொண்ட கடலையை தாராளமாக அள்ளிக் கொடுப்பார் தம்பி தாத்தா
உன்னைப் போல் பிள்ளையைப் பெறக் கொடுத்து வைக்க வேண்டும் என்பார்
நல்ல பீடு நடையோடு bike ஓட்டுவார் பாசமிகு ராவண்ணா பெரியப்பா படிப்பதைப் பாராட்டி சுய உழைப்பின் கொள்கையோடு வாழ்ந்தார் குழந்தை பெரியப்பா
அன்று மறைந்தவர்கள் எல்லாம் இந்த தீபாவளிக்கு என் மனதினுள் வந்து நனைத்த நல்லவர்களில் சிலர்
என்றோ மறைந்தவர்களில் எந்தன் மனதில் நிலைத்தவர்களோ இன்னும் பலர்!
- தஞ்சை த.இராமநாதன்

தீபாவளி வாழ்த்துக்கள்
ReplyDelete🙏🙏
Delete