Saturday, 19 October 2024

அப்படி இருந்த தீபாவளி

 

புது உடைக்காகத் தினந்தோறும் கடையை நோக்கிக் காத்துக் கிடக்கும் மனம்
கடையிலிருந்து வீட்டுக்கு வந்து கையை அடைந்ததும் குதித்து ஆடிடும் தினம்

அப்பாயி கையில் பிடிபட்டுக் கட்டியாகி  உடைக்க முடியாத கெட்டி உருண்டை
எப்படியும் பல்லில் பிடிபடாது கெட்டியாகிக் கடிக்க முடியாத கெட்டி உருண்டை

மோரில் கலந்து இருந்த வெண்ணெய் அப்பாயி கடைந்து வந்த வெண்ணெய் மோரில் ஒளிந்து இருந்த  வெண்ணெய்
அப்படியே நெஞ்சில் சேர்ந்தது என்னை

அப்பா வாங்கிக் கொடுப்பார் சர வெடி
அப்படி ஓடோடி வெடிப்பேன் தர வெடி களத்தில் வைத்து வெடித்தேன் வெடி களத்தில் வைத்து வெடிப்பேன் வெடி!

- தஞ்சை த.இராமநாதன்

6 comments:

  1. அப்பாடி வெடி இன்னும் கொஞ்சம் இனிப்பாக வெடித்திருக்கலாம். இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வெடித்து முடித்து இனிப்பை சுவைப்பதுதானே இயல்பு. தொடரும்...

      Delete
  2. Early morning mother forced to get up and apply oil and hot water shower, later got new clothes and sweets some more got money when we get blessings from grand parents and parents, unforgettable memories 😀

    ReplyDelete
  3. நன்று

    ReplyDelete